முதலமைச்சர் ஸ்டாலின் தனது அமெரிக்க பயணம் குறித்து கடிதத் தொகுப்பு ஒன்றை எழுதியுள்ளார். தற்போது அதன் முதல் பாகம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற பொருளாதார இலக்கை நிர்ணயித்து கடந்த மூன்றாண்டுகள் அயராது உழைத்ததால், பன்னாட்டு முதலீட்டாளர்கள் தமிழகத்தை முதன்மையாக தேர்ந்தெடுப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழக அரசு மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வருமெனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.