தனி விமானத்தில் என்ட்ரி கொடுத்த முதல்வர்.. பலத்த பாதுகாப்பில் நட்சத்திர விடுதி. கொண்டாட்டத்தில் கோவை
முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை சென்றடைந்தார். இன்று மாலை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக, தனி விமானம் மூலம், சென்னையில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்றார். அப்போது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வந்தடைந்தார். நட்சத்திர விடுதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாலை ஹோட்டலில் இருந்து புறப்பட்டு கொடிசியா மைதானத்திற்கு முதல்வர் வருகிறார். ஒரு மணி நேரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, அங்கிருந்து விமான நிலையம் சென்று, தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.