"நான் வரும் வரை கழிவுகளை அகற்றாமல் இருப்பீர்களா..?" அதிகாரிகளிடம் காட்டமாக பேசிய அமைச்சர் பொன்முடி

Update: 2024-10-17 02:26 GMT

விழுப்புரம் நகரில் மழை நீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாய்க்கால் தூர் வாரும் பணி நடைபெற்றது. இந்தப் பணிகளை, அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோர் ஆய்வு செய்தனர். கட்டபொம்மன் நகரில், சாலையோரம் மழை நீர் தேங்கி இருந்ததை கண்ட அமைச்சர் பொன்முடி, 4 நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என கோபத்துடன், நகராட்சி ஆணையரிடம் கேள்வி எழுப்பினார். நான் ஆய்விற்கு வரும் வரை மழை நீரை அகற்றாமல் இருப்பீர்களா என கேட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதேபோன்று தாமரைக்குளம் பகுதியில் அமைச்சர் வருகிறார் என்பதால், துப்புரவு பணியாளர்கள் வேக வேகமாக சாலையோரம் கொட்டப்பட்டிருந்த கழிவுகளை அகற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்