இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டுமென, மீனவ மக்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின், மீனவ மக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தரும்படி கேட்டுக் கொண்டார்.