காப்பி அடித்ததாக கூறிய தனியார் பள்ளி.. 8th மாணவி எடுத்த விபரீத முடிவு.. கதறும் தாய்.. பெரும் சோகம்

Update: 2024-07-27 02:30 GMT

தேர்வில் காப்பி அடித்ததாக கூறி மாணவியை தனியார் பள்ளி நிர்வாகம் அவமானப்படுத்தியதால் மாணவி தூக்கிட்டு த*கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் - ராஜலெட்சுமி தம்பதி. இவர்களின் மூத்த மகள் ரோஷினி மேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் நடந்த மாதிரி தேர்வில் மாணவி ரோஷினி காப்பி அடித்ததாகவும், இதனால் பள்ளி நிர்வாகம் எல்லா மாணவிகளின் முன்னிலையில் ரோஷினியை அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு த*கொலை செய்து கொண்டார். மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு மற்றொரு நிகழ்ச்சிக்காக வந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முறையிட்டனர். இதனை தொடர்ந்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். மாணவி த*கொலை செய்து கொண்டது குறித்து பெற்றோர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. இதே நேரத்தில் மாணவி தேர்வில் காப்பி அடித்தற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்