``சுற்றிலும் பெருங்கடல்.. ஒத்த சொட்டுக்கு ஏங்கிய 5 லட்சம் உயிர்கள்'' - நரகமாக மாறிய சென்னை சொர்க்கம்

Update: 2024-10-07 05:35 GMT

சென்னையில் விமானப் படை வான் சாகச நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பியபோது, ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்ததாலும், போதிய அளவில் ரயில்கள் இயக்கப்படாததாலும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சிந்தாதிரிபேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ரயில் நிலையங்களிலும், மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பொதுமக்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அனைத்து ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். மேலும், போதிய அளவில் ரயில்கள் இயக்கப்படவில்லை என்று கூறிய பொதுமக்கள், 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்ற அடிப்படையில் ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்பட்டதாக குற்றம்சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்