நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் உள்ள பெண் தோட்ட தொழிலாளர்கள், மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக வேலை இல்லாததால் வருவாயின்றி தவிப்பதாக வேதனை தெரிவித்த அவர்கள், அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.