மாங்குரோவ் காடுகளைஅசைத்து பார்த்த எண்ணெய் கசிவு - வெளியான அதிர்ச்சி தகவல்

Update: 2023-12-16 07:04 GMT

எண்ணெய் கசிவு காரணமாக, எண்ணூர் முகத்துவாரத்துக்கு அருகே உள்ள மாங்குரோவ் காடுகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடலோரத்தின் வளமாகவும், அரிய வகை உயிரினங்களின் வாழ்விடமாகவும், கடலோரத்தைப் பாதுகாக்கும் அரணாகவும் திகழ்ந்து வருகின்றன மாங்குரோவ் காடுகள்...

இந்த மாங்குரோவ் காடுகள் புயல், வெள்ளம், மண் அரிப்பு, கடல் நீர் வெள்ளப்பெருக்கு போன்றவற்றிலிருந்து மனிதர்களைக் காக்கும் தலையாய பணியைச் செய்து வருகின்றன.

அதாவது, கடல் அலைகளைத் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பும் பணியை செவ்வென செய்கின்றன இந்தக் மாங்குரோவ் காடுகள்...

சுனாமி பேரழிவின்போது, சதுப்பு நிலக் காடுகள் செழித்து வளர்ந்திருந்த இடங்களில் அதன் பாதிப்பு மிகவும் குறைவாக உணரப்பட்டது. இதன் பிறகுதான் மாங்குரோவ் காடுகளின் முக்கியத்துவம் உலகிற்கு தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்