த.வெ.க மாநாடு - கிடா விருந்து வைத்து அழைத்த தொண்டர்கள்

Update: 2024-09-22 15:56 GMT

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலை கிராமத்தில் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், மாநாடு வெற்றிகரமாக நடைபெற வேண்டி, மதுரை கருப்பாயூரணி பகுதியில் மாநில துணை செயலாளர் விஜய் அன்பன் தலைமையில் முனியாண்டி கோவிலில் கிடா வெட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து 500க்கும் மேற்பட்டோருக்கு கறி விருந்து வைத்து மாநாட்டில் பங்கேற்குமாறு தொண்டர்கள் அழைப்பு விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்