முதலீடு பணத்திற்கு அதிக லாபம்.. பல லட்சங்களை சுருட்டிய கும்பல் - போலீசார் போட்ட கிடுக்கிப்பிடி

Update: 2024-09-16 04:55 GMT

மதுரையில், முதலீடு பணத்திற்கு அதிக லாபம் தருவதாக கூறி தனியார் நிதி நிறுவனம் பண மோசடி செய்த புகாரில் மூவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை, வடக்கு பெருமாள் மேஸ்திரி தெரு பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. முதலீடு பணத்திற்கு அதிக லாபம் தருவதாக கூறி மக்களிடம் இருந்து லட்சக் கணக்கில் இந்த நிறுவனம் பணம் மோசடி செய்ததாக மத்திய பொருளாதார குற்றப்பிரிவில் புகாரளிக்கப் பட்டிருக்கிறது. இந்நிலையில், நிறுவனத்தை நடத்திவந்த, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், அவரது மனைவி வெண்ணிலா மற்றும் சாந்தி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, சென்னை, காரைக்குடி, மதுரை என 5 இடங்களில் சோதனை நடத்திய போலீசார், பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்த பொதுமக்கள், உரிய ஆவணங்களுடன் மதுரை தபால் தந்திநகர் மற்றும் சங்கரபாண்டியன் நகர் பகுதியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகாரளிக்கலாம் என தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்