காட்டுத்தீயாய் பரவிய வீடியோ.. மதுரை மீனாட்சி கோயிலில் உண்மையில் என்ன நடந்தது?
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாற்றுத் திறனாளி பெண்ணை துன்புறுத்தியதாக வீடியோ பரவிய விவகாரத்தில், உண்மைக்கு புறம்பாக வீடியோ வெளியிடப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது...
தர்மபுரியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்ற மாற்றுத் திறனாளி பெண் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற போது, அவரது செயற்கை காலை அகற்றக் கோரி கோயில் நிர்வாகத்தினர் துன்புறுத்தியதாக வீடியோ வெளியிடப்பட்டது. இந்நிலையில், சம்பவத்திற்கு மறுப்பு தெரிவித்து மதுரை மாநகர காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சம்பந்தப்பட்ட பெண்ணின் கைப்பையில் சிறிய அளவில் கத்தி இருந்ததாகவும், அதனை பொருள்கள் வைக்கும் அறையில் வைக்க அறிவுறுத்தப்பட்டதாக கோயில் நிர்வாகத்தின் கூறியதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அவரது செயற்கை காலில் இருந்த செருப்பை மட்டுமே அகற்றக் கூறியதாகவும், தரிசனத்திற்கு பின்னர் அப்பெண் அன்னதானம் சாப்பிட்டு விட்டுச் சென்றதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உண்மைக்கு புறம்பான வீடியோ பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.