வண்டியூர் கண்மாய் அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் பூங்கா மற்றும் உணவகம் அமைக்கும் பணிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது மாநகராட்சியின் நடவடிக்கை குறித்து நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். கண்மாயில் உணவகங்கள் கட்டுவது யாரை திருப்திபடுத்த என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கண்மாய்களில் ஆக்கிரமிப்பு செய்து உணவகங்கள் கட்டுவது ஏற்கத்தக்கது அல்ல என தெரிவித்தனர். கடைகள் கட்டி வாடகைக்கு விடுவது மட்டுமே மாநகராட்சியின் பணி அல்ல என கூறீய நீதிபதிகள், மதுரை மாநகராட்சி ஆணையாளர் பொதுப்பணித்துறை பொறியாளர் தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.