மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் முதல் போக பாசனத்திற்காக, வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. 120 நாட்களில் 6 ஆயிரத்து 739 மில்லியன் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. வினாடிக்கு 900 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், ஏழு சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது. சுமார் 70 கிலோமீட்டர் தூரம் நீளமுள்ள பாசன கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும் கால்வாயில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.