வெடித்த போராட்டம்.. ஒன்று கூடிய 108.. மதுரையில் பரபரப்பு
மதுரையில் சுகாதாரப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் உதவிப் பணியாளர்கள் மற்றும் மற்றும் ஆயுஷ் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் வார விடுமுறை வழங்க வேண்டும் என்றும், பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு கமிட்டி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் வருடாந்திர ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் கோரிக்கைகளை காலதாமதம் செய்யாமல் நிறைவேற்றிட வேண்டும் என்றும், தமிழக சமையல் எரிவாயு சிலிண்டர் ஏஜென்சி நிறுவனங்கள் அனைத்து சிலிண்டர் டெலிவரி தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனஸாக 12 ஆயிரம் வழங்கிட வேண்டும். என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி, நெல்லை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள், ஆயுஷ் பணியாளர்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், எல்பிஜி விநியோகம் செய்பவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.