நாதக நிர்வாகி கொடூர கொலை...``மெயின் குற்றவாளிகள் இவங்க தான்..''..தப்பிக்க முயன்ற போது முறிந்த கால்.. தட்டி தூக்கிய போலீசார்

Update: 2024-07-18 12:03 GMT

நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை வழக்கில், தலைமறைவாக இருந்த நால்வரையும் போலீசார் கைது செய்தனர்.மதுரை தல்லாக்குளத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி பால சுப்பிரமணியனை, 4 பேர் கொண்ட கும்பல் சில நாள்களுக்கு முன் படுகொலை செய்தது. பின்னணியில் குடும்ப பிரச்சிணை இருப்பது தெரியவந்தது. பால சுப்பிரமணியனின் அண்ணனான மகாலிங்கத்திற்கும், உறவினரான பாண்டியராஜனுக்கும் சொத்துப் பிரச்சினை இருந்து வந்திருக்கிறது. இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணும் விதமாக தன் மகளை மகாலிங்கத்தின் மகனுக்கு பாண்டியராஜன் திருமணம் செய்து வைத்திருக்கிறார். இதில், தம்பதி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பிரிந்த நிலையில், பாண்டியராஜனுக்கும், மகாலிங்கத்திற்குமான சொத்துப் பிரச்சினை முற்றி இருக்கிறது. இதில், தனக்கு எதிராக பேசியதாக கூறி தன் அண்ணனாலையே பால சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்நிலையில், மகாலிங்கம் மற்றும் அவரின் மகனை கைது செய்த போலீசார், மேலும் நால்வரை வலை வீசி தேடி வந்தனர். இதில், செல்லூர் ரயில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த நால்வரையும் போலீசார் சுற்று வளைத்திருக்கின்றனர். போலீசாரை கண்டதும், நால்வரும் மேம்பாலத்தில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதில், பரத், கோகுலகண்ணன் மற்றும் பென்னி ஆகிய 3 பேரும் கீழே குதித்ததில் கால் முறிவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. நிலையில், மூவரையும் போலீசார் மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்