திண்டுக்கல் வெள்ளபொம்மன்பட்டி கிராமத்தில் மே 19ம் தேதி நடைபெறவுள்ள கோவில் திருவிழாவில் பட்டியல் இன மக்கள் வழிபாடு நடத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதும் சில இடங்களில் தீண்டாமை நடைபெறுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது எனக் கூறிய நீதிபதிகள், ஒரு மனிதன், மற்றொரு மனிதனை பாகுபாடு பார்ப்பது ஏற்புடையதல்ல எனக் கூறினர். திருவிழாவின்போது, எந்த வித சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் காவல்துறையினர் பார்த்துக் கொள்ள வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.