உரிமம் இல்லாத கல் குவாரிகளை ட்ரோன் மூலம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, கன்னியாகுமரி ஆட்சியருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பால்ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள எங்கள் கிராமத்தின் அருகே 2025ம் ஆண்டு வரை பட்டா நிலத்தில் கல் மற்றும் கிராவல் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அருகில் மற்றொரு குவாரி உரிமம் நீட்டிக்கப்படாத நிலையில், தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதிகாரிகள் உரிய ஆய்வு செய்யாமலும், விதிகளை மீறியும் அனுமதித்துள்ளனர். இதனால் நட்டாலம் முள்ளங்கினா விளை, கொலஞ்சி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் பாதிக்கப்படுவதால், குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கனிமளவத்துறை மண்டல இணை இயக்குநர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் டிரோன் மூலம் சம்பந்தப்பட்ட குவாரியில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.Madurai High Court orders Kumari Collector