மதுரையில் முதலமைச்சரின் காணொலி நிகழ்ச்சிக்கு வருகை தந்த 100-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்தனர். "மா மதுரை" விழாவில் பங்கேற்க வருகை தந்த பொதுமக்கள், தமுக்கம் மைதான வளாகத்திற்குள் வாகனங்களை நிறுத்தி வைத்தனர். இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை புகைப்படம் எடுத்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்ததுடன், வாகனங்களை எடுத்துச் சென்றனர். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.