படிப்பில் குறைந்த மதிப்பெண்.. "மனதில் அழுத்தம்.." -கதவுக்கு பின் தொங்கிய கயிறு; உறைந்து நின்ற தாத்தா

Update: 2023-09-25 04:07 GMT

தென்காசியில், மன அழுத்தம் காரணமாக 12ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடையநல்லூர் வடக்கு ரத வீதி பகுதியில் வசித்து வரும் முருகன் மகன் சந்துரு, பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தனக்கு சரியாக படிப்பு வரவில்லை என்பதால், பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்கித் தருமாறு பெற்றோரிடம் சிறுவன் தகராறு செய்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு போகாமல், தென்காசியில் உள்ள தனது தாத்தா வீட்டில் வசித்து வந்துள்ளான். இந்த நிலையில் வீட்டில் சிறுவன் தனியாக இருந்தபோது, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். தகவல் அறிந்து வந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான விசாரணையில், சிறுவனின் கல்வி குறித்து பெற்றோர் கண்டித்ததால், மன அழுத்தத்தின் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்