அந்த விஷயத்துக்கு அடிமையான காதல் கணவன்.. ஆசை மனைவி எடுத்த விபரீத முடிவு

Update: 2024-06-16 10:11 GMT

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அம்மு என்பவரை கடந்த 2012ல் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், முருகானந்தம் மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. பலமுறை எச்சரித்தும் கணவர் குடிப்பழக்கத்தை கைவிடாததால் விரக்தியில் இருந்த அம்மு, சம்பவத்தன்றும் முருகானந்தம் மதுபோதையில் வீட்டுக்கு வந்த ஆத்திரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். உறவினர்களை அதிர்ச்சியில் மூழ்கடித்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்