தாம்பரத்தில் தடைசெய்யப்பட்ட காட்டன் லாட்டரி விற்பனையில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முத்து என்பவரை கத்தியை காட்டி மிரட்டி, 2,000 ரூபாயை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை சம்பவ இடத்திற்கு சென்று கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், முத்துவிடம் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் மிரட்டி வந்ததும், கத்தியை காட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது. 8 லட்ச ரூபாய் பணம், கார், இருசக்கர வாகனம், செல்போன், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரையும் சிறையிலடைத்தனர்.