`உத்தரவு வந்தா தான் உணவு' - அலுவலர்கள் தட்டேந்தி நின்ற அவலம்

Update: 2024-04-08 06:49 GMT

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது...

\மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு, சிறுமுகை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு வழங்குவதற்காக சரக்கு வாகனம் வரவழைக்கப்பட்டது. அப்போது, வயதானவர்கள் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் சற்று விரைவாக உணவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், வட்டாட்சியரிடமிருந்து உத்தரவு வந்த பின்னர் தான் உணவு வழங்கப்படுமென ஊழியர்கள் கூறியதாக தெரிகிறது. மேலும், பள்ளியின் பின்புறத்தில் உரிய ஏற்பாடு இன்றி உணவுகள் பரிமாறப்பட்டதால், வகுப்பிற்காக வருகை தந்திருந்தவர்கள் அனைவரும் கடும் வெயிலில் காத்திருக்கும் நிலை உருவானது. குறிப்பாக அந்நேரத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அலுவலர்கள் சிலர் உணவை யாரும் வாங்க வேண்டாமென அறிவுறுத்தி 

Tags:    

மேலும் செய்திகள்