கோடீஸ்வர பாஜக, ஆம் ஆத்மி, BJD வேட்பாளர்கள் - இவ்வளவு கோடிகளா!? தலை சுற்றவைக்கும் சொத்து பட்டியல்

Update: 2024-05-21 09:53 GMT

ஆறாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில்,

சொத்து மதிப்பு அடிப்படையில் டாப் 5 வேட்பாளர்கள்

குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

மே 25ஆம் தேதி நடைபெற உள்ள ஆறாம் கட்ட மக்களவை

தேர்தலில், 57 தொகுதிகளில், மொத்தம் 869 வேட்பாளர்கள்

போட்டியிடுகின்றனர்.

இவர்களில் 866 வேட்பாளர்கள் தாக்கல் செய்த தேர்தல்

பிரமாணப் பத்திரங்களை அலசி, ஒரு விரிவான அறிக்கையை ஏ.டி.ஆர் அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஹரியானாவின் குருஷேத்ரா தொகுதியில் போட்டியிடும், பாஜக வேட்பாளரும், ஜிண்டால் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் தலைவருமான நவீன் ஜிண்டால், 1,241 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இவருக்கு அடுத்த படியாக 482 ரூபாய் சொத்து மதிப்புடன்

ஒடிசா மாநிலம் கட்டாக் தொகுதி பி.ஜே.டி வேட்பாளர் சந்ருப்த்

மிஸ்ரா இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ஹரியானாவின் குருஷேத்ரா தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி

வேட்பாளர் சுஷில் குப்தா, 169 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

ஹாரியானாவின் ஹிஸ்ஸார் தொகுதி, ஜனநாயக ஜனதா கட்சி வேட்பாளர் நைனா சிங் செளதாலா நான்காம் இடத்தை

பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 139 கோடி

ரூபாய் என வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

ஹரியானாவின் குர்கான் தொகுதி பாஜக வேட்பாளர் ராவ் இந்தர்ஜித் சிங், 121 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஐந்தாம் இடத்தில் உள்ளார்.

ஹரியானாவின் குருஷேத்ரா தொகுதியில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் ஆகிய இருவரும் டாப் 5 பட்டியலில் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்