ஆன்லைன் விளம்பரத்தை நம்பி தாய்லாந்தில் சிக்கிய நபர்..- மீட்டு வந்த அமைச்சர் எல்.முருகன்

Update: 2024-09-21 17:02 GMT

ஆன்லைன் விளம்பரத்தை நம்பி தாய்லாந்துக்கு வேலைக்கு சென்று மாட்டிக்கொண்டவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீட்டு வீட்டில் ஒப்படைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூரை சேர்ந்த முத்துக்குமார் என்ற இளைஞர் வாட்சப்பில் வந்த ஆன்லைன் விளம்பரம் மூலமாக தாய்லாந்துக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு சென்றவரை ஆன்லைன் மோசடி செய்யும் இடத்துக்கு அழைத்து சென்று மோசடி வேலைகளில் ஈடுபடுத்தி உள்ளனர். அவருடைய செல்போன், விசா போன்றவற்றை பறித்து வைத்து கொண்டதால் அவரால் வீட்டுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடன் தெரிவித்துள்ளனர். அவர், இந்திய தூதரகம் மூலமாக முத்துக்குமார் இருக்கும் இடத்தை கண்டறிந்து அவரை மீட்டு தூத்துக்குடிக்கு அழைத்து வந்தார். தொடர்ந்து காரில் வீட்டுக்கு வந்த அவர்களை ஊர்மக்கள் மேள தாளம் முழங்க உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முத்துக்குமார், ஆன்லைன் விளம்பரத்தை நம்பி தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்