"உள்ளே வரும் IDFC" LIC பயனர்களுக்கு வெளியான முக்கிய அப்டேட் | LIC | IDFC First Bank | Thanthitv

Update: 2024-07-22 17:30 GMT

எல்.ஐ.சி மற்றும் ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி இடையே, காப்பீட்டு வசதிகளை வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 2047-ஆம் ஆண்டிற்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆயுள் காப்பீட்டு பாதுகாப்பை வழங்கி, அதில் வங்கிகள் மூலம் வழங்கப்படும் காப்பீட்டின் பங்களிப்பை அதிகரிக்க எல்.ஐ.சி நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கியுடன் இணைந்து காப்பீட்டு வசதிகளை வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம் வங்கியின் இணையதளம் மூலம் வாடிக்கையாளர்கள் எல்.ஐ.சி பாலிசிகளை ஆன்லைனில் வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்