தன்பாலின திருமணத்தை அங்கீகரித்த முதல் தென்கிழக்கு ஆசிய நாடு.. உலக தலைப்பு செய்தியானது
தாய்லாந்தில், தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்கும் மசோதா, அந்நாட்டின் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது. தாய்லாந்தில் தன் பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வகை செய்யும் திருமண சமத்துவ மசோதா, நாடாளுமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, செனட் சபையிலும் திருமண சமத்துவ மசோதா நிறைவேற்றப்பட்டது.
ஏற்கனவே, மக்கள் பிரதிநிதிகள் கொண்ட சபையில் கடந்த மார்ச் மாதம் இந்த மசோதா நிறைவேறியது. இதன்மூலம் விரைவில் தாய்லாந்தில் தன்பாலின திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் முதல் தென்கிழக்கு ஆசிய நாடு என்ற பெருமையை தாய்லாந்து பெறுகிறது.