சத்தமே இல்லாமல் திடீரென உயர்ந்த விலை
கோடை வெப்பம் காரணமாக, எலுமிச்சையின் தேவை அதிகரித்து, அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக எலுமிச்சை பழம் தேவை வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது. நீர்ச்சத்து அதிகம் மற்றும் உடல் சூட்டை தணிக்கும் பழங்களில் முதன்மையான எலுமிச்சை பழம், சர்பத் , ஜூஸ் உள்ளிட்ட தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால், கோயம்பேடு சந்தையில் எலுமிச்சை பழத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மொத்த கொள்முதலில் ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எலுமிச்சை சில்லறை விற்பனை ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெங்காயம் 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 45 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.