பள்ளிக்கூட வாசலில் கால்வாய் பள்ளம்.. - குழந்தைகள் பலகையில் ஏறிச்செல்லும் திக்..திக் காட்சி..
பரணிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாசலில், மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. கால்வாய் பணி முழுமையாக நிறைவடையாமல் தற்போது வரை பள்ளம் திறந்த நிலையில் உள்ளது. ஆங்காங்கே கூர்மையான கம்பிகள் வெளியே தெரியும் வகையில் நீட்டிக்கொண்டிருப்பதால், பள்ளி மாணவர்கள் அச்சப்படுகின்றனர். இதையடுத்து ஆசிரியர்கள், வாசலில் நின்று மாணவர்களை மாணவர்களை பள்ளிக்குள் அழைத்து செல்கின்றனர். பள்ளி முன் கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.