Happy Mood-ல் இருந்த அதிகாரி..! கொண்டாட்டம் முடிவதற்குள்.. அப்படியே அள்ளி சென்ற போலீஸ் | Kumari

Update: 2024-09-14 12:24 GMT

குமரி மாவட்டம் கிள்ளியூரில் தனி பட்டா வழங்க பத்தாயிரம் ருபாய் லஞ்சம் கேட்ட நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் கூட்டாலுமூடு பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் தனக்கு சொந்தமான நான்கு சர்வே எண் கொண்ட நிலத்திற்கு தனி பட்டா கேட்டு கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் மனு செய்தார். நில அளவையர் ஞானசேகரன் அவருக்கு தனி பட்டா வழங்க பத்தாயிரம் ருபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அஜித்குமார் ஒஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்து நிலையில், அவர்கள் ரசயானம் தடவிய ரூபாய் நோட்டுகளை அஜித்குமாரிடம் அளித்தனர். தாலுகா அலுவலகத்தில் ஓணம் கொண்டாட்டத்தில் இருந்த நில அளவையரிடம், அஜித்குமார் கொண்டு லஞ்ச பணத்தை கொடுத்த உடன் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஞானசேகரனை கையும் கழுவுமாக பிடித்தனர். அவரிடம் கணக்கில் வராத பணம் கூடுதலாக உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்