கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 35 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தருமபுரியில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ஜெகதேவி, ஊத்தங்கரை ஆகிய இடங்களில் உள்ள வங்கிக் கிளைகளுக்கு பணம் கொண்டு செல்வதாக காரில் வந்தவர்கள் கூறிய போதிலும், அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்து, பர்கூர் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.