கோவை அரசு பள்ளியில் தேர்தல்.. மின்னணு எந்திரத்தில் ஓட்டுப்போட்ட மாணவர்கள்
கோவை மாவட்டம் மசக்காளிபாளையம், பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பளியில், மாணவர்களுக்கான தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. கோவை ராக் அமைப்பின் நிதியுதவியுடன் வடிவமைக்கப்பட்ட, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலமாக இந்த வாக்குப்பதிவு நடைபெற்றது. முதற்கட்டமாக ஜனநாயக முறைப்படி, மாணவர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். பின்னர் மாணவர்கள் மத்தியில் தங்களது பரப்புரயை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து பள்ளியில் உள்ள 550 மாணவர்களும் மின்னணு வாக்கு இயந்திரத்தில் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். மாணவர் தேர்தலுக்கான முடிவு நாளை அறிவிக்கப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.