வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் - கோவையில் பரபரப்பு

Update: 2024-08-30 02:12 GMT

விவசாய நிலத்தில் பெட்ரோல் எண்ணெய் பைப் லைன் கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்டம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

இருகூரிலிருந்து பெங்களூர் வரை எண்ணெய் குழாய்கள் அமைக்கும் பணியை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 74 கிலோமீட்டர் வரை இந்த எண்ணெய் பைப் லைன் பதிக்கப்பட உள்ளது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, கோரிக்கையை ஏற்காமல் பைப் லைனை பதித்தால் உடைக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்