"பள்ளியின் பெயர் மாற்றம்..!" கருப்பு மை பூசி அழித்த அமைச்சர் | DMK

Update: 2024-11-26 03:22 GMT

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்றின் பெயர்ப்பலகையில் இருந்த 'அரிசன் காலனி' என்ற வார்த்தையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கருப்பு மை பூசி அழித்தார்.

மல்லசமுத்திரத்தம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அரிசன் காலனி என்ற பெயரில் இருந்ததை மாற்ற கோரி சென்னையை சேர்ந்த அன்பழகன் என்ற வழக்கறிஞர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருந்தார். அதன்படி அந்த ஆணையம், அரிசன் காலனி என்ற பெயரை, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி - மல்லசமுத்திரத்தம் கிழக்கு " என மாற்றுவதற்கு பள்ளிக் கல்வித்துறைக்கு பரிந்துரை செய்தது. இந்த சூழலில், மல்லசமுத்திரம் பகுதிக்கு வருகை தந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை ஆய்வு செய்து, பள்ளியின் பெயர் பலகையில் இருந்த அரிசன் காலனி என்ற வார்த்தையை கருப்பு மை பூசி அழித்தார். பெயர் மாற்றத்திற்கான அரசாணையை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கி, இதற்காக போராடிய ஊர் பெரியவர் கணேசனுக்கு அவர் பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ‘கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்’ என்ற கலைஞரின் வரிகளைக் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்