கோவையில் ரயில் பெட்டிக்குள் தனியாக அலறிய பெண் சிசு.. - போலீசார் விசாரணை..

Update: 2024-09-23 11:10 GMT

கோவையில், ரயில் பெட்டியில் பெற்றோர் தவறவிட்ட பெண் குழந்தையை போலீசார் மீட்டனர். சென்னையில் இருந்து கோவை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில், பொதுப்பெட்டி இருக்கையில், 2 வயது பெண் குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது. இதனை துப்புரவுப் பணியாளர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்கள், குழந்தையை மீட்டு, கிணத்துக்கடவில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் ஒப்படைத்தனர். குழந்தையை தவறவிட்டுச் சென்ற பெற்றோர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்