கோவையில் அதிர்ச்சி சம்பவம் - இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த கும்பல்

Update: 2024-09-08 14:16 GMT

கோவையில் முன்விரோதம் காரணமாக குடிபோதையில் இருந்த ஒருவர், ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கெம்பட்டி காலனியை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவர், செல்வபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது, உறவினர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

அப்போது, ஏற்கெனவே இருந்த முன்பகை காரணமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, கோபாலகிருஷ்ணனை 4 பேர் ஓடஓட விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டிக் கொன்றனர். தகவல் அறிந்த போலீசார், கோபாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேரை செல்வபுரம் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்