``2 மணி நேரத்துக்கு 1 பஸ் வர்றது தான் சிறப்பு பஸ்ஸா?'' - பயணிகள் கொந்தளிப்பு
``2 மணி நேரத்துக்கு 1 பஸ் வர்றது தான் சிறப்பு பஸ்ஸா?'' - பயணிகள் கொந்தளிப்பு
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் தேவைக்கு ஏற்ப சிறப்பு பேருந்து இயக்கப்படவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டினர்.
சிங்காநல்லூரில் இருந்து பல்வேறு தென் மற்றும் மத்திய மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது. இந்த பேருந்துகளின் எண்ணிக்கை தேவைக்கு ஏற்ப இல்லாததால், பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு சூலூரில் இருந்தே பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்தது. இதனால் பல பயணிகள் அலைக்கழிப்புக்கு உள்ளாகினர்.