பெண் ஊழியர்களை கடைக்குள் மூடி அராஜகத்தில் ஈடுபட்ட பாஜக நபர் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
பேரூரில் பெண் ஊழியர்களை கடைக்குள் வைத்து, ஷட்டர் கதவுகளை மூடி பாஜக பிரமுகர் அராஜகம் செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டம் பேரூர் அருகே, கணேஷ் குமார் என்பவர் சிமெண்ட் கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் இருந்து தூசிகள் வெளியே வருவதாகவும், அருகேயுள்ள கடைகள் மற்றும் குடியிருப்பு வீடுகளுக்கு செல்வதாகவும் கூறி, கார்த்திகேயன் என்ற பாஜக பிரமுகர் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெண் ஊழியர்களை கடைக்குள் வைத்து மூடி, கார்த்திகேயன் கொலை மிரட்டல் விடுத்ததாக, கடையின் உரிமையாளர் கணேஷ் குமாரின் மனைவி மைதில் போலீசில் புகாரளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பெண் ஊழியர்களை கடைக்குள் வைத்து ஷட்டர் கதவுகளை மூடி, பாஜக பிரமுகர் அராஜகத்தில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.