விவசாயிகளுக்கு குட் நியூஸ்..! இது இருந்தால் போதும் வேலை சட்டுனு முடியும் | Koavi

Update: 2024-07-26 16:40 GMT

15 ஆயிரம் ட்ரோன்களை மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்குவதற்கு நாமோ ட்ரோன் நிதி என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக ஆயிரத்து 261 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள ஆயிரத்து 95 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய ட்ரோன் பயிற்சி மற்றும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 44 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி மற்றும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, ராமபட்டினம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் பத்ரகாளி அம்மன் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த வசந்தாமணி என்பவருக்கு ட்ரோன் பயிற்சி வழங்கப்பட்டு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வயல்வெளிகளில் திரவ உரங்கள், இயற்கை சார்ந்த மீன் அமிலம் போன்ற பொருட்களை தெளிக்கலாம். இதன் மதிப்பு சுமார் ஆறு

முதல் எட்டு லட்சம் ரூபாய் ஆகும். இன்று கோவை மாவட்ட ஆட்சியர் முன்பு ட்ரோனை இயக்கி காண்பித்தார். இதனை இவர்கள் விவசாயிகளுக்கு வாடகைக்கு விடலாம் என்றும், இது விவசாயிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்