கிளாம்பாக்கம் மெட்ரோ? RTI-யில் வெளியான அதிர்ச்சி தகவல்

Update: 2024-07-28 02:52 GMT

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம் 22 மாதங்களாக தமிழக அரசின் ஒப்புதல் கிடைக்காமல் முடங்கியுள்ளது ஆர்.டி.ஐ. தகவலில் தெரியவந்துள்ளது.சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்ட அறிக்கை 2022 செப்டம்பரில் தமிழக அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. திட்ட செலவு 4,625 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டது. 2024-25 தமிழக பட்ஜெட்டில் திட்டத்துக்கு விரைவில் ஒப்புதல் வழங்கி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மத்திய அரசு நிதி பங்களிப்போடு செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டு 22 மாதங்கள் ஆகும் வேளையில், இன்னும் தமிழக நிதித்துறை ஒப்புதல் வழங்கவில்லை என சிட்லபாக்கத்தை சேர்ந்த தயானந்த் கிருஷ்ணன் என்பவர் பெற்ற ஆர்.டி.ஐ. பதிலில் தெரியவந்துள்ளது. நிதித்துறை ஒப்புதலுக்கு பிறகு தலைமை செயலாளர் மற்றும் தமிழக முதலமைச்சர் இறுதி ஒப்புதல் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே மதுரை, கோவை, சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டம், சென்னை மெட்ரோ ரயில் Phase 1 விரிவாக்க திட்டங்களுக்கு குறுகிய காலத்தில் மாதங்களிலும் தமிழக அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது. ஆனால், சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் திட்டத்திற்கு 22 மாதங்களாக ஒப்புதல் வழங்கப்படவில்லை. இதுகுறித்து கவலை தெரிவிக்கும் புறநகர் மக்கள் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்