நாடே அதிர்ந்த சம்பவம் - அந்த நேரத்தில் போனில் பேசிய 200 பேர் சிக்கினர்?

Update: 2024-10-28 08:53 GMT

நாடே அதிர்ந்த சம்பவம் - அந்த நேரத்தில் போனில் பேசிய 200 பேர் சிக்கினர்?

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக, விபத்து நடந்த நேரத்தில், பொன்னேரி ரயில் நிலையம் மற்றும் கவரைப்பேட்டை நிலையத்தில் பேசிய 200-க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். கவரப்பேட்டை ரயில் விபத்திற்கு நாசவேலையே காரணம் என போலீசார் கண்டுபிடித்துள்ள நிலையில், கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் இரவு 8 மணி முதல் 8.30 மணி வரையிலும், பொன்னேரி ரயில் நிலையத்தில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் செல்போனில் பேசிய, சந்தேகப்படும்படியான 200-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அதுமட்டுமின்றி ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்