கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆடிப் பெருக்கை முன்னிட்டு வரும் பக்தர்கள், காவிரி ஆற்றில் நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ஆம் தேதி, காவிரி ஆற்றில் பொதுமக்கள் வழிபாடு செய்து வரும் நிலையில், இந்த ஆண்டு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றில் இறங்கி குளிக்கவோ, பரிசல் இயக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாயனூர் காவிரி தென்கரை பகுதியில், காவிரி ஆற்றுக்கு செல்லும் அனைத்து வழிகளையும் தகரம் கொண்டு அடைத்துள்ளனர்.