பட்டியலின சமூகத்தை இழிவாக பேசியதாக ஆடியோ வெளியான விவகாரத்தில், நடிகர் கார்த்திக் குமார் மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், வழக்கறிஞர் கவுதம் என்பவர் அளித்த புகார் மனுவில், பெண்களையும், பட்டியலின சமூகத்தினரையும் ஆபாசமாக இழிவாக நடிகர் கார்த்திக் குமார் திட்டியதாக குற்றம் சாட்டியுள்ளார்.