`முதல்வன் பட பாணியில்' - மாணவியின் ஆசையை நிறைவேற்றிய கலெக்டர் - மெய்சிலிர்த்து நின்ற தாய்

Update: 2024-07-18 17:01 GMT

காரைக்கால் மாவட்டத்தில் முதல் முறையாக ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக அரசு பள்ளி மாணவி பதவி ஏற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மாவட்ட நிர்வாக செயல்பாடுகள், பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் வளர்ச்சி திட்ட செயல்பாடுகளை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையிலும் எதிர்காலத்தில் சிறந்த குடிமக்களாக விளங்கவும் ஒருநாள் மாவட்ட ஆட்சியராக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என ஆட்சியர் மணிகண்டன் அறிவித்திருந்தார். இந்த நிலையில் காரைக்கால் மேடு மீனவர் கிராமத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி லித்யா ஸ்ரீ ஒரு நாள் ஆட்சியராக தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மணிகண்டன் முன்னிலையில் ஒரு நாள் ஆட்சியராக பதவி ஏற்றுக் கொண்டார். ஆட்சியர் இருக்கைக்கு அருகில் அவர் அமர வைக்கப்பட்டார்... தொடர்ந்து ஆட்சியர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து மாணவி லித்யா ஸ்ரீ துறை வாரியான கோப்புகளை மாவட்ட ஆட்சியருடன் இணைந்து ஆய்வு செய்து... பொது மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இதைக் கண்டு சிறுமியின் தாய் நெகிழ்ச்சி அடைந்தார்

Tags:    

மேலும் செய்திகள்