காந்தி ஜெயந்தி.. ரூ.1க்கு ஒரு வேட்டி - குவிந்த மக்கள் கூட்டம்

Update: 2024-10-02 12:34 GMT

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கதர் ஆடை நிறுவனத்தில் காந்தி ஜெயந்தி தினமான இன்று முதலில் வருகை தந்த நூறு நபர்களுக்கு ஒரு வேட்டி ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மக்களிடையே கதர் ஆடை பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் கதர் வேட்டி வாங்க உள்ளூர் வாசிகள் மட்டுமின்றி வெளியூரில் இருந்து திருநள்ளார் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக வந்திருந்த பக்தர்களும் முண்டியடித்து வாங்கிச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்