குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள டாஸ்மாக் பாரில், குழாய் நீரை பாட்டிலில் நிரப்பி விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
நித்திரவிளை சந்திப்பில் இயங்கி வரும் அந்த டாஸ்மாக் பாருக்கு மது குடிக்க வருபவர்களுக்கு ஒரு பாட்டில் தண்ணீர் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அந்த தண்ணீரை குழாயில் பிடித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதை, அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கையும் களவுமாக பிடித்து தட்டிக்கேட்டு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்...