குமரியில் அரிய வகை மணல்.. அரசு அறிவித்த உடனே மீனவ மக்கள் எடுத்த முடிவு..! | Kanyakumari
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களான மிடாலம் முதல் நீரோடி வரை உள்ள பகுதிகளில் அரிய வகை மணல் காணப்படுவதால் அவற்றிலிருந்து கனிமங்களை பிரித்தெடுக்க போவதாக அரசு அறிவித்துள்ளது, இது குறித்து வரும்
அக்டோபர் 1- ந்தேதி பத்மநாபபுரம் கோட்டாட்சியர்
அலுவலகத்தில் மீனவ மக்களிடம் கருத்து கேட்பு
கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இனையம் மீனவ கிராம
மக்கள் தபால் நிலையம் முன்பு ஒன்றுகூடி அரசுக்கு
எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். கருத்து கேட்பு கூட்டம் நடத்த கூடாது என்ற கோரிக்கை மனுக்களை எழுதி அரசுக்கும் அனுப்பி வைத்தனர்.