"ஏய் என்ன..."குழந்தை மாறி கத்தாதா..."கடுமையாக பேசிய டாக்டர் - தீயாய் பரவும் காட்சிகள்
"ஏய் என்ன..."குழந்தை மாறி கத்தாதா..."கடுமையாக பேசிய டாக்டர் - தீயாய் பரவும் காட்சிகள்
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவரிடம் மருத்துவர் அலட்சியமாக நடந்து கொண்ட விதம், சக நோயாளிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
கண்டன்விளை பகுதியை சேர்ந்த 20 வயதாகும் லெபின், சாலை விபத்தில் இடது காலை இழந்த நிலையில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், பணியில் இருந்த பி.ஜி. மருத்துவர், லெபினிடம், குழந்தை போன்று சத்தம் போட வேண்டாம் என்றும், வலியை தாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் சற்று கடுமையாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.