ஊராட்சி தலைவியால் பாய்விரித்து படுத்து போராட்டத்தில் இறங்கிய உறுப்பினர்கள் - குமரியில் பரபரப்பு

Update: 2024-01-24 06:48 GMT

ஊராட்சி தலைவியால் பாய்விரித்து படுத்து போராட்டத்தில் இறங்கிய உறுப்பினர்கள் - குமரியில் பரபரப்பு

குமரி மாவட்டம் அடைக்காக்குழி ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளில் முறைகேடு செய்யும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவியை கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் 9 பேர், அலுவலகத்தினுள் பாய்விரித்து படுத்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அடைக்காக்குழி ஊராட்சியின் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயராணி என்பவர் இருந்து வருகிறார். 12 வார்டுகளை கொண்ட இந்த ஊராட்சியில் 9 கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், 2 காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் உள்ளனர்.

இந்த நிலையில் ஊராட்சி தலைவர், வளர்ச்சி திட்ட பணிகள் செய்யும் போது, வார்டு உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசிக்காமல், முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில், இது சம்பந்தமாக வார்டு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு ஊராட்சி தலைவி பதில் கூறாமல் கிளம்பி சென்றதால், 9 வார்டு உறுப்பினர்களும் குழந்தைகளுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்