மகனின் செயலால் மனமுடைந்து வீடியோ வெளியிட்ட தந்தை

Update: 2024-06-14 13:10 GMT

கன்னியாகுமரியில், தன்னை பள்ளிக்கூடத்தில் சேர்க்காததால் சிறுவன் ஒருவன் கையை கத்தியால் வெட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பதறிப்போன பெற்றோர் குடும்ப வறுமையால் மகனை பள்ளியில் சேர்க்க முடியாததை எண்ணி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கையை கத்தியால் வெட்டிக் கொண்ட நாகர்கோவில் கள்ளியங்காடு பகுதியை சேர்ந்த சிறுவனை, வீட்டருகே இருக்கும் பள்ளிக்கூடத்தில் பெற்றோர் 8 ஆம் வகுப்பு சேர்க்க முயன்றபோது, அப்பள்ளி நிர்வாகம் சேர்க்க மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மகனின் செயலால் மனமுடைந்து தந்தை வெளியிட்ட வீடியோ பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்