ரயில் நிற்காமல் 10 நிமிடத்திற்கு முன்னால் சென்றிருந்தால்.. ஊர் மக்கள் மட்டும் இல்லைனா.. பயணி தகவல்
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மழை வெள்ளத்தால் சிக்கித் தவித்த பயணிகள் மீட்கப் பட்டு சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இந்த ரயில் இன்று அதிகாலை 3 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தடைந்தது... திண்டுக்கல்லைச் சேர்ந்த 20 பேர் அந்த ரயிலில் பயணித்த நிலையில், 3 நாட்கள் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் உணவு மற்றும் தண்ணீருக்காக மிகவும் சிரமப்பட்டதாக வேதனை தெரிவித்தனர்...